இறைத்தூது கிடைக்கும் முன்
தந்தையை காணும் பாக்கியம் பெறாத தம் அன்பு பேரனுக்கு பாட்டனார் அப்துல் முத்தலிப் "முஹம்மது"(புகழ்பெற்றவர்) என பெயர்ச்சூட்டினார். அரபுகளின் அறியாமைக் காலம் http://www.youtube.com/watch?v=lq1EIcqets4
இறைத்தூது கிடைத்த ஆரம்ப காலங்கள்.
தனது 40 வது வயதிலேயே இறை அழைப்பு பணி தமக்கு கிடைக்கப்பெற்றதும் முஹம்மத் (ஸல்) அவர்கள் தமது சமூகத்தினரை 'ஸபா' மலைக்குன்றின் அருகே முதல் முறையாக ஒன்று திரட்டினார்கள். ஸபா மலை மீது ஏறி நின்ற அவர் தனக்கு முன்னால் நிற்கும் மக்களைப் பார்த்துக் கேட்கிறார்:
“ | இந்த மலையின் பின்னால் உங்களைத் தாக்க ஒரு படை
நிற்கிறது என்று நான் சொன்னால் நீங்கள் நம்புவீர்களா?
மக்கள்: ‘ஆம், நம்புவோம்’
முஹம்மத்: ‘ஏன் நம்புவீர்கள்’
மக்கள்: ‘ஏனெனில் நீர் பொய் சொன்னதில்லை’
முஹம்மத்: ‘அவ்வாறாயின் இவ்வுலகுக்குப் பின்னால் வரும் இன்னொரு வாழ்வு பற்றியும் அங்கு காத்திருக்கும் தண்டனைப் பற்றியும் நான் உங்களுக்கு எச்சரிக்கிறேன்.’
| ” |
- (ஆதாரநூல்: ரஹீகுல் மக்தூம்)
"உங்களால் மலைக்குப் பின்னால் என்ன இருக்கிறது என்பதைப் பார்க்க முடியாது. எனவே மலையின் மீது நிற்கும் என்னால் பார்க்க முடியும் என்பதாலும் , என் மீதிருக்கும் நம்பிக்கையாலும் என்னை நம்புகிறீர்கள்.அது போலவே மறைவான உலகுக்கும் உங்களுக்கும் இடையே நான் நிற்கிறேன்.அவ்வுலகோடு நான் நேரடித் தொடர்பு வைத்திருக்கிறேன். இப்போது நீங்கள் என்னை நம்புவீர்களாயின் நான் சொல்லும் அவ்வுலகையும் நம்புங்கள்"
நபிகள் நாயகம் பட்ட துன்பங்கள் http://www.youtube.com/watch?v=bL9XUwi-XZc
இதுதான் முஹம்மத் அவர்களது நிறுவலாக இருந்திருக்க வேண்டும்.
நன்றி :விக்கிப்பீடியா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக