அஸ்ஸலாமு அலைக்கும் வர்ஹ - “எனக்கு அல்லாஹ்வே போதுமானவன். (வழிபடுவதற்குரிய) நாயன் அவனையன்றி (வேறுயாரும்) இல்லை; அவன் மீதே நான் பரிபூரண நம்பிக்கை கொண்டுள்ளேன் - அவன் தான் மகத்தான அரியாசனத்தின் (அர்ஷின்) அதிபதி” 9:129

திங்கள், 26 மே, 2014

மிஃராஜ் - விளக்கம்

மிஃராஜ்’ என்பது நபி (ஸல்) அவர்கள் சென்ற வானுலகப் பயணத்தைக் குறிக்கும்.இது குறித்து குர்அனில்17வது அத்தியாயத்தின் துவக்கத்தில் முதல் வசனமாகப் பேசப்படுகிறது.இது கனவில் அல்லஉடல் ரீதியான பயணம் என்பதை “அஸ்ரா பி அப்திஹி லைலன்” “தனது அடியாரை ஓர் இரவில் அழைத்துச் சென்றான்”என்ற வசனம் மிகத் தெளிவாகவே குறிப்பிடுகிறது. (17:1)

“மிஃராஜ்” இதன் பொருள் உயருதல் என்பதாகும். நபி (ஸல்)செய்த விண்ணேற்றததைக் குறிக்க இச் சொல் பயன்படுத்தப்படுகிறது.இப்யணம் துவங்கியது நபித்துவத்திற்குப் பன் 11.5 ஆண்டுகளுக்குப் பின் உம்முஹானி அவர்களின் இல்லத்திலிருந்து என்று சிலரும், 12 ஆண்டுகளக்குப்பின் ஹத்தீம் என் இடத்திலிருந்து என்று வேறு சிலரும் கூறுகின்றனர். இது ஹிஜ்ரத்துக்கு ஓராண்டுக்கு முன் நிகழ்ந்தது என்றும் , ஐந்து ஆண்டுகளுக்கு முன் நிகழ்தது என்றும் இரு வேறு கருத்துகள் நிலவுவதாக “சீரத்துந்நபி” வரலாற்றில் காணப்படுகிறது்.இது ஓர் ஆன்மீகப்பயணம் என்று என்று ஆயிஷா(ரலி),முஆவியா (ரலி) ஆகியோர் கூறுகின்றனர். இந்த பயணத்தின் போது தான் ஐவேளைத் தொழுகை விதியாக்கப்பட்டது.
Blogger Widgets

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

Jumma mosque, Vadamadurai