அஸ்ஸலாமு அலைக்கும் வர்ஹ - “எனக்கு அல்லாஹ்வே போதுமானவன். (வழிபடுவதற்குரிய) நாயன் அவனையன்றி (வேறுயாரும்) இல்லை; அவன் மீதே நான் பரிபூரண நம்பிக்கை கொண்டுள்ளேன் - அவன் தான் மகத்தான அரியாசனத்தின் (அர்ஷின்) அதிபதி” 9:129

செவ்வாய், 28 ஆகஸ்ட், 2012

இஸ்லாமிய சிந்தனை துளிகள் - சிந்தனை துளிகள்


14NOV
ஒரு மனிதனின் உண்மையான செல்வம் அவன் இந்த உலகில் செய்யும் நல்ல விடயங்களாகும்.
முஹம்மது நபி (ஸல்)
அறிவு தாழ்ந்தவனை உயர்த்தும் ஆனால் அறியாமை வலிமையை வீழ்த்திவிடும்.
அலி (ரழி)
வணக்கங்களில் சோர்வடைய வேண்டாம், வணக்கம் மூலம் யாரும் தோல்வியடையவில்லை.
முஹம்மது நபி (ஸல்)
வணக்கம் என்பது அல்லாஹ்விடம் நெருக்கத்தை ஏற்படுத்தும். அல்லாஹ்விடம் நெருங்கியவன் வாழ்வையும் மரணத்தையும் சமமாக ஏற்று கொள்கிறான்.
மௌலானா ஜலாலுத்தீன் ரூமி
பொறுமையை கடைபிடியுங்கள். பொறுமை தான் எல்லாவற்றிலும் மிக முக்கியமானது.
அபூ பக்கர் (ரழி)
இறந்தகாலத்திலிருந்து படிப்பினை பெற்று நன்மையின் பக்கம் விரையுங்கள்.
உதுமான் (ரழி)
அல்லாஹ் அவ்வாதவற்றுடன் நீங்கள் நெருங்கி இருக்கும் காலமெல்லாம், உங்களை கவலையும் துன்பமும் வருத்தும், ஏக இறைவனைக்கு இணைகளை கற்பிப்பீர்கள், உங்கள் பாவங்களிலிருந்து வெளியேற முடியாமல் தவிப்பீர்கள்.
அப்துல் காதிர் அல்-ஜிலானி
ஒருவர் தன்னை தனது செயல்களை விட பெரியவராக நினைப்பது பணிவாகது. ஒரு பணிவான மனிதன் தன்னை தனது செயல்களை விட தாழ்ந்தவான நினைப்பான்.
இப்னு அதா அல்லா அல்- இஸ்கந்திரி
அல்லாஹ்வுக்காக நீங்கள் ஒருவரை ஓருவர் விரும்பினால், அல்லாஹ் உங்களை விரும்புவான்.
இஸ்மாயில் ஹக்கி தொப்ராக்
உலக ஆசைகளிலிருந்து விடுபடுவது என்பது மற்றவர்களில் எந்த வகையிலும் சார்ந்து இருக்க கூடாது. மற்றவர்களில் எந்த வகையிலும் சாராமல் இருப்பது தனக்கு எவ்வித முக்கியத்துவமும் கொடுக்காமல் இருப்பதிலிருந்து ஆரம்பிக்கிறது.
சுப்யான்-இ சவ்ரி
பிரதிபலிப்பது அருளின் வாசல்களை திறக்கிறது. நீங்கள் பார்க்கவில்லையா? ஒருவர் முதலில் பிரதிபலிக்கிறார் பின்பு பாவமன்னிப்பு தேடுகிறாhர்.
சுப்யான் இப்னு உயய்னா
மிகவும் சிறந்த அறிவு என்னவென்றால் அல்லாஹ்வை கண்ணியப்படுத்துவதும் அவனை பயப்படுவதுமாகம்.
இப்னு அதாஅல்லா அல்-இஸ்கன்தரி
இறைவனது பண்புகளை சிந்திப்பதன் மூலம் தான் உண்மையான பணிவு ஏற்படுகிறது
இப்னு அதாஅல்லா அல்-இஸ்கன்தரி
ஒருவரது கண்ணியம் மூன்று விடயங்களில் இருக்கிறது: பேரழிவுகள் ஏற்படும் போது முறையிடாமல் இருப்பது, வலி ஏற்படும் போது தாங்கி கொள்வது, தன்னை முன்னிலை படுத்தாமல் இருப்பது.
அபூ தர்தா
உங்களால் முடிந்தளவு கற்று கொள்ளுங்கள், அறிந்து கொள்ளுங்கள் – நீங்கள் கற்று கொண்டவைகளை நடைமுறை படுத்தாத வரையில், அல்லாஹ் அதற்கு கூலி கொடுக்க மாட்டான்.
முஆத் இப்னு ஜபல்
முஹம்மது (ஸல்) அவர்களுக்கு நெருக்கமானவர்கள் அவரை பின்பற்றுபவர்கள். அவரது எதிரிகள் அல்லாஹ்வை மறுப்பவர்கள்.
அலி (ரழி)
ஏக இறைவனம் மீது நம்பிக்கை கொண்டவர்கள் அல்லாஹ் தங்களை பார்த்து கொண்டிருக்கிறான் என்பதை அறிவார்கள். அத்தகைய அடியார்கள் அவர்களது மனோ இச்சைகளிலிருந்து விடுபட்டு மறுமைக்காக தங்களை தயார்படுத்தி கொள்வார்கள். ஹிஜ்ர், இறுதி நாள் வரை இருக்கும் ஒரு , அறியாமையிலிருந்து கல்வியை நோக்கியும் அல்லாஹ்வை மறப்பதிலிருந்து விடுபட்டு அவனை சார்ந்திருப்பதையும், பாவங்களிலிருந்து கட்டுப்படுவதை நோக்கியும், இறுக்கமான உள்ளத்தை பாவமன்னிப்பு தேடுவதை நோக்கியும் அழைத்து செல்கிறது.
சஹி இப்னு அபிதல்ஹா அத்-துஸ்தரி
எவர்கள் தங்களது பணியாட்களை கேவலப்படுத்தி கொடுமைப்படுத்துகிறார்களோ அவர்களுக்கு அல்லாஹ்வை தெரியாது. படைப்பாளனை விரும்புபவர்கள் அவனால் படைக்கப்பட்டவற்றையும் விரும்புவார்கள்.
ஆயிஷா (ரழி)
தாங்கள் விரும்பிய ஒன்று கிடைக்காத சந்தர்பத்தில் பொறுமையாக இருப்பவர்கள், அதை அடையும் போது பணிவாக இருப்பவர்கள், அது கைவிட்டு போகும் உறுதியாக இருப்பவர்கள் தான் அறிவாளிகள்.
இமாம் கஸ்ஸாலி
ஏக இறைவன விசுவாசம் கொண்டவர்கள் முத்துக்களை போன்றவர்கள், அவர்கள் எங்கிருந்த போதிலும் அவர்கள் அந்த இடத்தை அழங்கரிப்பார்கள்.
மாலிக் இப்னு தீனார்
அல்லாஹ் மீது மட்டும் நம்பிக்i கொண்டவர்கள் தான் உண்மையான அடியார்கள்.
செய்யது அன்-நபசி
நான்கு நன்மைகளை கொண்டு உங்கள் இதயங்களை விடுவிக்கலாம் : அல்லாஹ்வுக்கு மாத்திரம் பணிவது, அல்லாஹ்வை மாத்திரம் தேவைகளை கேட்பது, அல்லாஹ்வை மாத்திரம் பயப்படுவதும் கண்ணியப்படுத்துவதும், அல்லாஹ்வில் மாத்திரம் நம்பிக்கை கொள்வது.
செய்யது அல்-ஹிரி
இதயம் மரணித்தமைக்கான அடையாளங்களில் ஒன்று ஒருவருக்கு தவறிய நல்ல சந்தர்பங்களுக்காக கவலைப்படுவதில்லை. அவர் செய்த கெட்ட செயல்களுக்காக வருந்துவதுமில்லை.
இப்னு அதாஅல்லா அல்-இஸ்கன்தரி
எவர்கள் தங்களது நன்மையான காரியங்களை பற்றி தொடர்ந்து பேசி கொண்டிருக்கிறார்களோ அவர்களது ஒரு பிழையை கொண்டு மௌனமாகிவிடுவார்கள். ஆனால் அல்லாஹ்வின் அருள்களை பற்றி பேசுபவர்களை எந்த தவறும் தடுத்து நிறுத்தாது.
இப்னு அதாஅல்லா அல்-இஸ்கன்தரி
அல்லாஹ்வை பயந்து அவனை கண்ணியப்படுத்துபவர்கள் தான் உண்மையான அறிவாளிகள்.
அமிர் இப்னு ஷரஹில்
அல்லாஹக்;கு பயந்து கட்டுப்படுபவர்களுடன் நீங்கள் சேர்ந்து இருங்கள். இறை நிராகரிப்பு உள்ளேயும் வெளியேயும் இருக்கும். வெளிப்பு இறை நிராகரிப்பு என்பது சிலைகளை வணங்குவதாகும். உட்புற இறை நிராகரிப்பு என்பது அல்லாஹ்வை விட்டுவிட்டு ஏனையவர்களில் சார்ந்து இருப்பதும், அவர்கள் மீது நம்பிக்கை கொள்வதும், அவர்களிலிருந்து நன்மையும் தீமையும் எதிர்பார்பதுமாகும்.
அப்துல் காதிர் அல்-ஜிலானி
உலகம் தன்னை விரும்பி அதை அடையவிருப்பவர்களையும் அதை வெறுத்து ஒதுங்கிவிடுபவர்களையும் கொண்டுள்ளது. உலகம் விரும்பபடக்கூடியதாக இருக்கிறது. அதை விரும்புபவர்களை அதை உதாசீனப்படுத்துகிறது. அதை வெறுப்பவர்களை அது பின்தொடர்கிறது. உலகம் மறுமைக்கான பாலமாக இருக்கிறது. அதை கடக்க வேண்டும். ஆனால் அதில் நிரந்தரமா இருக்க வேண்டும் என்று ஆசைப்பட கூடாது. பாலங்களில் பெரும் அரண்மனைகளை கட்டுவது மடமையாகும். மறுமைக்கானவைகளை முடிந்தளவு எடுத்து கொள்ளுங்கள், அதில் நுழைய தடுப்பவற்றை விட்டுவிடுங்கள்.
யஹ்யா இப்னு முஆத்
அல்லாஹ்வே, உனக்கு விருப்பமில்லாதவற்றில் ஈடுவதிலிருந்து என்னை காப்பாற்றுவாயாக. நீ அருளும் மிக அத்தியவசியமான சுத்தமான கௌரவத்தை எனக்கு அருள்வாயாக, உன்னை மறந்தவர்களை போன்று எனக்கு வேலைப்பழுவை அதிமாக்கி விடாதே, என்னை ஏற்று கொள்வாயாக, உன்னை மாத்திரம் விரும்பக்கூடிய அடியார்களில் ஒருவராக என்னை ஏற்று கொள்வாயாக, எனது இதயத்தை உனது அருளை கொண்டு நிரப்புவாயாக, உனது உன்னதமான பெயர்களை கொண்டு எனது நாவுகளை நிரப்புவாயாக, நீ ஏற்று கொள்ளக்கூடிய நல்ல விடயங்களில் எனது உறுப்புகளை ஈடுபடுத்துவாயாக, உன்னை சாராத சிந்தனைகள், ஞாபகங்கள், உணர்ச்சிகள் அனைத்திலிருந்து என்னை காப்பாற்றுவாயாக.
ஜுனைத் அல் பக்தாதி
பணிவான வணக்கம் என்பது அல்லாஹ்விடமிருந்து மாத்திரம் அருளையும் சன்மானத்தையம் எதிர்பார்பதாகும்.
அலி (ரழி)
நீங்கள் அல்லாஹ்வை விரும்பி அவனது அன்பை பரப்பினால், வானத்திலும் பூமியிலும் உள்ள அனைத்தும் உங்களை விரும்பும். அல்லாஹ்வுக்கு கட்டுப்படுங்கள், வானங்கள் பூமியிலுள்ள அனைத்தும் உங்களுக்கு கட்டுப்படும்.
இபுறாஹிம் தஸ்ஸ{கி
அல்லாஹ்வே! எனது அமைதியை ஏற்படுத்துவாயாக, நான் பார்த்து படிக்க கூடியவனாகவும், உனது பெயரை உச்சரிக்க கூடிய நாவை எனக்கு தருவாயாக. உன்னை என்றென்றும் நினைப்பவனாக என்னை மாற்றிவிடுவாயாக.
தல்ஹா இப்னு முஸரிப்
எவர் தனது இதயத்தை அல்லாஹ்வுக்கு மாத்திரம் அர்பணித்து அதில் நிலைத்திருக்கிறாரோ, அவரது இதயத்திலிருந்து பெரும் ஒளி உருவாகி நாவின் மூலம் அது வெளியாகும்.
யஹ்யா இப்னு முஆத்
நம்பிககையின் கதவு திறக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் அல்லாஹ்விடமிருந்து உங்களுக்கு கிடைத்த அருள்களை நினைத்து பாருங்கள். பயத்தின் கதவு திறக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் நீங்கள் அவனுக்கு செய்தவற்றை நினைத்து பாருங்கள்.
இப்னு அதா அல்லா அல்- இஸ்கந்திரி
நண்பரே! அல்லாஹ்வின் பக்கம் மாத்திரம் திரும்பி அவன் மீது மாத்திரம் முழுமையான நம்பிக்கையை வைப்பீராக. அனைத்து நிகழ்வுகளும் அவனது விருப்ப படியே நடைபெறுகிறது. அல்லாஹ்வை தவிர்ந்து வேறு எந்த அடியாரின் நன்மதிப்பையும் பெற விரும்ப வேண்டாம்.
அப்துல் காதிர் தெஸ்துதி
இதயம் அல்லாஹ்வின் இடம் என்ற பதத்தின் கருத்து அடியான் அல்லாஹ் விரும்புபவற்றை மாத்திரம் அதில் வைத்து, அவன் வெறுப்பவற்றை அதிலிருந்து வீசி எரிந்து விடவேண்டும்.
அபுல் ஹசன் அலி இப்னு வெபா (ரழி)
இரண்டு நண்பர்கள் கைகளை போன்றவர்கள், ஒன்று மற்றயதை கழுவும்.
அலி (ரழி)
ஒரு விடயத்தின் ஆரம்பத்தில் அல்லாஹ்வின் பக்கம் திரும்புவது அதன் முடிவு சிறப்பாக அமையும் என்பதற்கான அறிகுறியாகும்.
இப்னு அதாஅல்லா அல்-இஸ்கன்தரி
மார்க்கத்தின் மிகச் சிறந்த கடமை என்னவென்றால் கட்டளையிடப்பட்டவற்றை ஏற்று நடப்பதும் விலக்கப்பட்டவற்றை தவிர்ந்து விடுவதுமாகும்.
உமர் (ரழி)
அவர்களுக்கு கீழாக நெருப்பு எரிந்து கொண்டிருக்கும் போது மக்கள் அல்லாஹ்க்கு எதிராக செயல்படுவது வியப்பாக இருக்கிறது.
எல்மலிலீ ஹம்தி யாஸிர்
அல்லாஹ்வின் அருளை கொண்டு அல்லாஹ்வுக்கு எதிராக செயல்படுவது நன்றியாகாது.
ஜுனைத் அல் பக்தாதி
எவர் தனக்கு கொடுக்கப்பட்ட அருள்கள் நிரந்தரமாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர், அல்லாஹ்வை புகழ்ந்து அவன் தான் அருள்களின் இறைவன், அவன் தான் அதை இறக்கி வைக்கிறான் என்று கூறட்டும்.
அபுல் ஹசன் அலி இப்னு வெபா
நீங்கள் உங்கள் அறிவை நடைமுறை படுத்தவில்லை என்றால் அல்லாஹ் உங்களுக்கு கூலி கொடுக்க மாட்டான்.
முஆத் இப்னு ஜபல்
தூதர்களும் ஏனையவர்களும் பொறுமையின்றி எதையும் பெற்று கொள்ளவில்லை.
மய்மூன் இப்னு மஹ்ரான்
அல்லாஹ்வின் பக்கம் திரும்பாதவர்களை தங்களது நண்பர்களாக எடுத்து கொள்பவர்கள் அவர்களது பணியாட்களுக்கு முன்பு சிறுமைபடுத்தப்படுவார்கள்.
அபுல் ஹசன் அலி இப்னு வெபா
நான் யாரை எனது நண்பராக எடுத்து கொள்வேன்? நீங்கள் யார் என்பதை நன்கு அறிந்தவன், உங்களது உண்மைகளை மறைக்க முடியாதவன், வேறுவகையில் சொல்வதானால், அல்லாஹ்.
அபு யாஸித் அல் பஸ்தமி
வெற்றியும் சலுகைகளும் அல்லாஹ்விடம் இருந்து தான் வருகிறது.
செய்யது குத்ப்
இறைவனுக்கான சேவைகளை உலக ஆதாயங்களுக்காக பிற்போடுவது மடமையாகும்.
இப்னு அதாஅல்லா அல்-இஸ்கன்தரி
அல்லாஹ்வை பேசும் சொற்கள் அழகானவை. அவனது அருள்களை சிந்திப்பது மிகப்பெரும் மதக் கடமையாகும்.
உமர் இப்னு அப்துல் அஸீஸ்
அல்லாஹ்வின் பார்வை உங்கள் மீது இருக்கும் போது மக்களின் பார்வைகளுக்கு எப்படி முக்கியத்துவம் கொடுக்க முடியும்? மக்களின் பார்வைகளை புறந்தள்ளி விட்டு அல்லாஹ்வுடையதை பாருங்கள்.
இப்னு அதாஅல்லா அல்-இஸ்கன்தரி
இறைவனால் செய்ய முடியுமான காரியங்களில் ஒருவரது உதவியை நாட வேண்டாம். அவரால் முடியாதவற்றை எப்படி அவரால் செய்ய முடியும்? ஒருவர் தனக்கே உதவி செய்ய முடியாத போது மற்றவருக்கு எவ்வாறு உதவ முடியும்?
இப்னு அதாஅல்லா அல்-இஸ்கன்தரி
சிறந்த மனிதன் யாரென்றால் தனது ஆசைகளை கட்டுப்படுத்தி கொள்பவர். அல்லாஹ் அவரை அவனது அடியார்கள் மூலம் போற்றி புகழ்கிறான்.
அபுல் ஹசன் அலி இப்னு வெபா
அல்லாஹ் இந்த உலகை உங்களுக்கு தந்தது நீங்கள் மறுமையை பெற்று கொள்வதற்காக தவிர இந்த உலகை விரும்புவதற்கல்ல.
உதுமான் (ரழி)
நீங்கள் திரும்ப திரும்ப கேட்ட போதும், அருள் சற்று தாமதமாக வருவதால் நம்பிக்கை இழந்து விட வேண்டாம். ஏனெனில் அல்லாஹ் பதிலளிப்பதாக உறுதியளித்துள்ளான். இருப்பினும் அருள் வருவதற்கு காரணம் அருளை அவன் உங்களுக்காக தெரிவு செய்துள்ளானே தவிர நீங்கள் உங்களுக்கு கேட்டதற்காக அல்ல.
இப்னு அதாஅல்லா அல்-இஸ்கன்தரி
நீங்கள் அல்லாஹ்வை விரும்பவில்லை என்றால் அவன் எப்படி உங்களை விரும்புவான்.
யஹ்யா இப்னு முஆத்
அறிவவ தேடுபவர்கள் அல்லாஹ்வுக்கு எதிராக செயல்படாமல் இருக்கட்டும்.
பிஷ்ரி ஹாபி
அல்லாஹவின் உதவியை விட்டும் தூரமானவனை எவ்வாறு அறிந்து கொள்ளலாம்? நன்மையானவற்றை தீயவைகளாக கருதுவதும் தீயவைகளை நன்மை என்று கருதுவதுமாகும்.
முஹம்மது இப்னு காப் அல்-கராசி
மூன்று விடயங்களை செய்யாமல் மூன்று விதமான நற்பேறுகளை ஆசைப்படுபவர்கள், அல்லாஹ் தடுத்தவைகளை தவிர்ந்து கொள்ளாமல் அல்லாஹ் அவர்களை விரும்புவதாக சொல்பவர்கள், அல்லாஹ்வின் பாதையில் செல்வங்களை செலவிடாமல் சுவர்க்கத்தை விரும்புவதாக சொல்பவர்கள், ஏழைகளை விரும்பாமல் நபிகள் நாயகத்தை விரும்புவதாக சொல்பவர்கள், அனைவரும் பொய்யர்கள்.
ஹாதிம் அல்-ஹசம்
நயவஞ்சகர்கள் என்பவர்கள் யார்? இஸ்லாத்தை பற்றி பேசுபவர்கள் ஆனால் அதற்காக ஒன்றும் செய்யாதவர்கள்.
ஹ{சைபா (ரழி)
தங்களை பணிவாக கருதாமல் சேவைகள் செய்பவர்கள் உண்மையில் தங்களுக்காகவே செய்கிறார்கள். அவர்கள் அல்லாஹ்வுக்காக அல்ல.
இமாம் அல்-கஸ்ஸாலி
அல்லாஹ் கூறுகிறான் – யார் அநியாயம் செய்கிறார்களோ அவர்கள் சாய்வது நரகின் பக்கம் (ஹ{த்: 113). சற்று சிந்தித்து பாருங்கள்- நீங்கள் அநியாயம் செய்பவராக இல்லாமல் அவருக்கு பக்கத்தில் இருந்தாலே உங்களுக்கு நரகம். அப்படியானால் அநியாயம் செய்பவர்களின் கதி என்ன?
இமாம் அல்-கஸ்ஸாலி
அறிவுள்ள அடியான் எப்படி அவனது நல்ல செயல்களை சொல்லி காட்டி பெருமை பாராட்ட முடியும்? ஒரு நல்ல செயலை செய்வது அல்லாஹ்வின் அருள்களில் உள்ளதாகும். அனைத்து அடியார்களும் தங்களுக்கு அத்தகைய பாக்கியம் கிடைத்ததற்காக பணிவாக நன்றி பாராட்ட வேண்டும்.
அபூ சுலைமான் அத்-தரணி
அல்லாஹ்வின் பாதையை விட்டும் தூரமானவர்களை நண்பர்களாக எடுத்து கொள்ள வேண்டாம்.
இப்னு அதாஅல்லா அல்-இஸ்கன்தரி
ஒருவர் அவரது நண்பரை ஏன் நேசிக்க வேண்டும் ? ஏனெனில் அவர் அல்லாஹ்வை நேசிப்பதாலாகும்.
அப+ சப்வான் இப்னு அவான்
பொய்கள், பிழைகள் போன்றவைகளில் தொடர்ந்து இருப்பவர்களது இதயத்தில் வணக்கத்தின் இன்பம் அற்று போகும். தங்களை உயிருடன் வைத்து கொள்ள விரும்புபவர்கள் அவர்களது இதயத்திலிருந்து பேராசையை அகற்ற வேண்டும்.
அப்துல்லா இப்னு ஹ{பைக்
அல்லாஹ்விடம் மாத்திரம் உதவி தேடுவது உங்களை அல்லாஹ்வின் பக்கம் நெருக்கமாக்கி வைக்கும். நீங்கள் மற்ற மக்களிடம் தேவையற்று ஒன்றும் கேட்காமல் இருப்பது உங்களை மக்களின் பால் நெருக்கமாக்குவதுடன் மற்றவர்களின் பார்வையில் உங்களை உயர்த்தும்.
அபூ பக்கர் அல் வர்ராக்
உடலின் நோய் வலி மூலம் வெளிப்படும். இதயத்தின் நோய் பாவங்கள் மூலம் வெளிப்படும். ஆகவே இதயம் பாவங்களில் திழைத்திருக்கும் காலமெல்லாம் வணக்கத்தின் மீது விருப்பம் கொள்ளாது.
துன்னூனு; அல்-மிஸ்ரி
மரணம் வருமுன்னர் அதிகமான நன்மைகளை செய்து கொள்ளுங்கள்.
உதுமான் (ரழி)
அல்லாஹ் எல்லா பொருட்களிலும் நன்மையையே நாடுகிறான்.
முஹம்மது நபி (ஸல்)
றீங்கள் விரும்புபவற்றை உங்கள் சகோதரர்களுக்கு விரும்பாத வரையும் நீங்கள் உண்மையான விசுவாசியாக மாட்டீர்கள்.
முஹம்மது நபி (ஸல்)
மற்றவர்களை திருத்த முன்னர் உங்களை திருத்தி கொள்ளுங்கள்.
உமர் (ரழி)
அல்லாஹ்வை அடிக்கடி நினைவு கூறுங்கள்.
உமர் (ரழி)
உங்கள் மனோ இச்சைகளுக்கு எதிராக போராடுங்கள். அல்லாஹ்வுக்கு கட்டுப்படுங்கள்.
அப்துல் காதிர் அல்-ஜிலானி
அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துவதன் மூலம் உங்களுக்கு கிடைக்கும் அருள்களை தக்க வைத்து கொள்ளுங்கள்.
அர்வசி
எமது மனசாட்சியே ஒரு கெட்ட செயலின் மறைமுகமான சாட்சியாகும்.
உமர் (ரழி)
இதயத்திலிருந்து வெளியாவதில் மிக சிறந்தது, இதயம் எவ்வளவு சுத்தமாக இருக்கிறதோ அந்தளவு அல்லாஹ்வின் பக்கம் உண்மையான அர்பணிப்பாகும். அதன் பலன் மிகப் பெரியது.
உமர் (ரழி)
மறுமையை இவ்வுலகிற்காக விற்பவன் தான் மிகப் பெரும் முட்டாள்.
உமர் (ரழி)
நம்பிக்கையில் சிறந்தது : நீங்கள் எங்கிருந்த போதிலும் அல்லாஹ் உங்களுடன் இருக்கிறான் என்ற நம்பிக்கையாகும்.
முஹம்மது நபி (ஸல்)
தன்னிடத்தில் ஒரு பிழையை வைத்து கொண்டு மற்றவர்களின் பிழைகளை தேடுவது தான் மிகப்பெரும் அவமானமாகும்.
உமர் (ரழி)
மன்னிப்பு தான் வெற்றியின் குறிக்கோள்.
முஹம்மது நபி (ஸல்)
யாராலும் அவரது விதியை மீறவோ அல்லது மாற்றவோ முடியாது.
கோதே
நெருப்பு பலகையை எரிப்பதை போன்று பொறாமை நன்மைகளை அழித்துவிடும்.
முஹம்மது நபி (ஸல்)
நுளம்பின் கண்ணை படைத்தவன் தான் சூரியனையும் படைத்தான்.
பதியுஸ்ஸமான் செய்யது நுர்சி
உண்மையான சுதந்திரம் என்பது இறைவனுக்கு முற்று முழுதாக கட்டுப்படுவதாகும்.
அலி (ரழி)
மக்கள் முதலில் பண ஆசை காரணமாக தங்களது ஆரோக்கியத்தை பாழாக்கி கொள்கிறார்கள். பின்பு ஆரோக்கியத்தை பெருவதற்காக பணத்தை செலவழிக்கிறார்கள்.
கோதே
உங்கள் உலகை தூயு;மையாக்கி கொள்ளுங்கள். நீங்கள் நாளை மரணிப்பதாக நினைத்து கொண்டு மறுமைக்காக செயல்படுங்கள்.
முஹம்மது நபி (ஸல்)
இறைவனின் பெயரை அழைப்பது அவனது இதயத்திற்கான சிறந்த மருந்தாகும்.
முஹம்மது நபி (ஸல்)
உங்களில் சிறந்தவர் நல்ல பண்புள்ளவர்
முஹம்மது நபி (ஸல்)
இறைவன் உங்கள் பொருளையோ அல்லது உடலமைப்பையோக பார்பதில்லை. அவன் உங்கள் இதயத்தையும் உங்கள் செயல்களையும் தான் பார்க்கிறான்.
முஹம்மது நபி (ஸல்)
அறிவை தேடுங்கள். அறிவை பெற்று கொள்ள பொறுமையை மேற்கொள்ளுங்கள்.
உமர் (ரழி)
உலகிலுள்ள அனைவரும் விருந்தாளிகள். அவர்களிடமுள்ள பணம் கடனாகும். விருந்தாளி விரைவாகவோ அல்லது தாமதமாகவோ சென்றாக வேண்டும். கடன் மீண்டும் செலுத்தப்பட வேண்டும்.
இப்னு மஸ்ஊது
தெரிந்து கொள்ளுங்கள், பொறுமை என்பது உடலிலுள்ள தலையை போன்றது. உடலை விட்டு தலை சென்று விட்டால் முழு உடலுக்கும் எந்த பயனும் இல்லை. அதை போன்று பொறுமை இல்லையென்றால் அனைத்தும் சிதைந்து விடும்.
அலி (ரழி)
பொறுமைக்கு இரண்டு பக்கங்கள் உண்டு. ஒன்று பொறுமை மற்றய பாதி இறைவனுக்கு நன்றி செலுத்துவதாகும்.
இப்னு மஸ்ஊது
நீங்கள் மறைமுகமாக இருக்கும் சந்தர்பத்தில் பாவத்திற்கு அஞ்சிக் கொள்ளுங்கள். அங்கு தான் நீங்கள் உங்களுக்கு எதிராக சாட்சியாக இருக்கிறீர்கள்.
அலி (ரழி)
எனது குறைகளை தெரிவிப்பவர் தான் எனக்கு மிகவும் பிடித்த மனிதர்
உமர் (ரழி)
எண்ணம் தான் ஒரு செயலை உண்மையாக்குகிறது. எண்ணம் சரியாக இருந்தால் செயலும் சரியாக இருக்கும். அது மோசமாக இருந்தால் செயலும் மோசமாக தான் இருக்கும்.
இமாம் அன்-நவவி
நான் எனது நண்பர்களை பார்த்தேன், அதில் நாவை அடுக்குவதை போன்ற நண்பனை காணவில்லை. நான் ஆடைகளை பற்றி சிந்தித்தேன், அதில் பய பக்தியை விட சிறந்த ஆடையை நான் காணவில்லை. நான் எல்லா நன்மையான காரியங்களையும் பற்றி சிந்தித்தேன், அதில் நல்ல ஆலோசனையை போன்ற நல்ல காரியத்தை நான் காணவில்லை. நல்ல விடயங்களை பற்றி நான் சிந்தித்தேன், அதில் பொறுமையை போன்ற நல்ல விடயத்தை காணவில்லை.
உமர் (ரழி)

வெள்ளி, 17 ஆகஸ்ட், 2012

நோன்பின் ஒழுங்குகள் - நோன்பு


1. ஃபஜ்ருக்கு சற்று முன்பு ஸஹர் உணவு உண்பதும் சூரியன் மறைந்த உடனே தாமதப்படுத்தாது நோன்பு திறப்பதும் சுன்னத்தாகும்.
2. பேரித்தம் பழத்தை கொண்டு நோன்பு திறப்பது, அது கிடைக்கவில்லையெனில் தண்ணீரைக்கொண்டு நோன்பு திறப்பது சுன்னத்தாகும்.
3. ஸஹர் நேரத்தில் தாமதமாக எழுந்து ஃபஜ்ருடைய நேரம் வந்துவிட்டது என தெரிந்தும் ஸஹர் என்ற பெயரில் எதையேனும் உண்பது தவறாகும். ஃபஜ்ர் நேரம் வந்துவிட்டால் எதையும் உண்ணக்கூடாது. இது போன்ற நிலைகளில் ஸஹர் செய்யாமலேயே நோன்பு நோற்க வேண்டும்.
4. ஹலால் என்னும் இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்ட உணவையே உட்கொள்ள வேண்டும்.
5. நோன்பாளி அதிகமான வணக்க வழிபாடுகளில் ஈடுபடவேண்டும், அல்லாஹ் தடுத்தவைகளை விட்டும் முழுமையாக தவிர்ந்து கொள்ள வேண்டும். பொய், புறம், கோள் சொல்லுதல், ஏமாற்றுதல், ஹராமான வழியில் பொருளீட்டல் போன்ற தவறான அனைத்து சொல், செயல்களை விட்டும் தவிர்ந்திருத்தல் கட்டாயக் கடமையாகும்.
6. ரமலான் கடைசிப் பத்து நாட்களில் அதிலும் குறிப்பாக ஒற்றைப்படை இரவுகள் அனைத்திலும் இரவு முழுவதும் வணக்க வழிபாட்டில் ஈடுபட்டு லைலத்துல் கத்ர் இரவை தேடிக்கொள்ள வேண்டும்.
7. பெருநாள் தொழுகைக்கு முன்பு ஸதகத்துல் ஃபித்ர் எனும் பெருநாள் தர்மத்தை முறையாகக் கொடுக்க வேண்டும்.

திங்கள், 13 ஆகஸ்ட், 2012

நோன்பை அனுமதிக்கும் முறிக்கும் செயல்கள் - நோன்பு


நோன்பை முறிக்கும் செயல்கள்

1. சாப்பிடுதல், குடித்தல் போன்றவற்றால் (அவைகள் உடலுக்கு பயன்தராத புகைபிடித்தல் போன்றவையாக இருந்தாலும் சரியே) நோன்பு முறிந்து விடும்.
2. முத்தமிடுதல், அணைத்தல், சுய இன்பம் போன்றவற்றால் இந்திரியம் வெளியானால் நோன்பு முறிந்து விடும், தூக்கத்தில் தானாகவே இந்திரியம் வெளியானால் நோன்பு முறியாது.
3. வேண்டுமென்று வாந்தி எடுத்தால் நோன்பு முறிந்து விடும். தானாகவே வாந்தி வந்தால் நோன்பு முறியாது.
4. உணவைப் போன்று சக்தியூட்டக்கூடிய பொருட்களை (மருந்து, குளுக்கோஸ் போன்றவைகளை) ஊசி போன்றவற்றின் மூலம் உடம்புக்கு செலுத்தினாலும் நோன்பு முறிந்து விடும்.
5. மாதவிடாய் மற்றும் பிரசவ இரத்தம் வந்துவிட்டால் நோன்பு முறிந்து விடும்.

[தொகு]நோன்பின் அனுமதிகள்  

1. நோன்பின்போது காயங்களுக்கு மருந்து போடுதல், பல் பிடுங்குதல், கண், காதுகளுக்கு சொட்டு மருந்திடுதல் போன்வற்றிற்கு அனுமதியுள்ளது.
2. காயங்கள், சிறுமூக்கு உடைதல், பல்பிடுங்குதல் போன்றவற்றால் இரத்தம் வெளியானால் நோன்பு முறியாது.
3. நோன்பு நாட்களின் பகல்பொழுதில் பல் துலக்குவது தவறில்லை. மாறாக அது நோன்பல்லாத நாட்களில் சுன்னத்தாக இருப்பது போன்றே நோன்பு நாட்களிலும் சுன்னத்தாகும்.
4. குளிப்பு கடமையான நிலையில் ஸஹர் செய்வதில் தவறில்லை. அதற்கு அடுத்து வரும் சுப்ஹு தொழுகைக்காக குளித்துக் கொண்டாலே போதுமானது.
5. கடும் வெயிலின் காரணமாக குளிர்ந்த நீரை உடலில் ஊற்றிக்கொள்வதோ, குளிர் சாதனங்களை உடல்மீது பயன்படுத்துவதிலோ, பகல் மற்றும் மாலைபொழுதில் குளித்துக் கொள்வதிலோ தவறில்லை.
6. நோன்பு திறக்க எதுவும் கிடைக்காவிட்டால் நோன்பு திறக்கும் நேரத்தில், நோன்பு திறப்பதாக எண்ணிக்கொண்டு பிறகு வாய்ப்புக் கிடைக்கும் போது சாப்பிட்டு கொண்டால் போதுமானது.
7. வாய் கொப்பளிக்கும் போது தன்னை அறியாது தண்ணீர் தொண்டையில் இறங்கிவிட்டால் நோன்பு முறியாது. ஆனால் அடித்தொண்டைவரை தண்ணீரை செலுத்தாமல் இருக்க வேண்டும்.
8. நேரம் தெரியாமல் சூரியன் மறைந்து விட்டது என்று நினைத்து, சூரியன் மறைவதற்கு முன்னரோ, அல்லது ஃபஜ்ர் நேரம் வரவில்லை என்று நினைத்து, ஃபஜ்ர் நேரம் வந்ததற்கு பிறகு சாப்பிட்டு விட்டாலோ நோன்பு முறியாது. எனினும் சரியான நேரம் தெரிந்து விட்டால் உடனே நிறுத்திக் கொள்ள வேண்டும்.
9. மறந்து அல்லது தெரியாமல் சாப்பிட்டோ, குடித்தோ விட்டால் நோன்பு முறியாது. ஆனால் நோன்பின் நினைவு வந்தவுடனே நிறுத்திகொள்ள வேண்டும்.

வெள்ளி, 10 ஆகஸ்ட், 2012

நோன்பும் விதிவிலக்கும் - நோன்பு


பருவமடைந்த இஸ்லாம் ஆண், பெண் அனைவரும் நோன்பு இருப்பது கடமையாகும். இருப்பினும் சில அவசியங்களின் அடிப்படையில் நோன்பு இருப்பதிலிருந்து கீழ்காணும் நிலையில் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
  • முதுமை மற்றும் நீங்காத நோயின் காரணத்தினால் நோன்பு நோற்க முடியாதவர்கள் ஒவ்வொரு நோன்பிற்குப் பதிலாக ஒரு ஏழைக்கு உணவளிக்க வேண்டும்.
  • பைத்தியக்காரர்கள், நன்மை-தீமையை பிரித்தறிய முடியாத மூளை வளர்ச்சி குன்றியவர்கள், வயோதிகத்தால் புத்தி பேதலித்தவர்கள் ஆகியோர் நோன்பு நோற்பது கடமையில்லை. நோன்புக்கு பதிலாக ஏழைகளுக்கு உணவு ஏதும் கொடுக்க வேண்டியதுமில்லை.
  • சில நாட்களில் நீங்கிவிடும் என்று எதிர்பார்க்கப்படும் நோயாக இருந்தால் அந்த நோயின் காரணமாகவும் நோன்பை விட்டுவிட அனுமதியுள்ளது. நோய் நீங்கியபின் விடுபட்ட நோன்புகளை நோற்க வேண்டும்.
  • பயணம் செய்பவர்களுக்கு நோன்பை விட்டுவிட அனுமதியுள்ளது. ஊர் திரும்பியபின் விடுபட்ட நோன்புகளை நோற்க வேண்டும்.
  • கர்ப்பமாக இருக்கும் பெண், அல்லது பாலூட்டிக் கொண்டிருக்கும் பெண் நோன்பு நோற்பதால் தனக்கோ அல்லது குழந்தைக்கோ ஏதேனும் துன்பம் வரலாம் என்று பயந்தால் நோன்பை விட்டுவிட அனுமதியுள்ளது. அந்தப்பயம் நீங்கியபின் விடுபட்ட நோன்புகளை நோற்க வேண்டும்.
  • மாதவிடாய் அல்லது பிரசவ இரத்தம் வந்துவிட்டால் நோன்பு நோற்கக்கூடாது. இரத்தம் நின்ற பிறகு விடுபட்ட நோன்புகளை நோற்க வேண்டும்.
  • "தீ" மற்றும் நீரில் மூழ்குதல் போன்ற ஆபத்துக்குள்ளானவர்களை காப்பாற்றுவதற்காக நோன்பை விட்டுவிட அனுமதியுள்ளது. பிறகு அந்த நோன்பை நோற்க வேண்டும்.

திங்கள், 6 ஆகஸ்ட், 2012

நோன்பின் முக்கியத்துவம் - நோன்பு



  • வணக்கங்களைச் செய்பவர்களுக்கு கூலியாக மறுமையில் சுவர்க்கத்தை ஏற்பாடு செய்து வைத்திருக்கின்றான் என்பது இஸ்லாமிய நம்பிக்கையாகும். இந்த வணக்கங்களின் வரிசையில் ஒன்றாக உள்ளதுதான் நோன்பு. நோன்பு என்னும் வணக்கம் மற்ற வணக்கங்களிலிருந்து எதிர்பார்க்கப்படும் தியாகங்களுக்கு முற்றிலும் மாறுபடுகின்றது. நோன்பு என்பது பசி, தாகம், இச்சை, இவைகளை இறைவனிடத்திலுள்ள நன்மையை எதிர்பார்த்தவராக நோன்பு மாதத்தின் பகல் நேரத்தில் கட்டுப்படுத்திக் கொள்வதாகும். இது ஒரு சடங்காகக் கருதாமல் வணக்கம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் செய்வதாகக் கொள்ளப்படுகிறது. நோன்பின் நோக்கமே இறையச்சத்தை ஏற்படுத்திக் கொள்வதுதான்.
  • இறையச்சம் என்பது அல்லாவிற்கு பயந்து, அவன் அறிவுறுத்தியவைகளை செய்தும், தடை செய்தவைகளை தவிர்த்தும் நடப்பதுதான். இஸ்லாம் நோன்பாளி, யாருக்கும் தெரியாத இடத்தில் தனிமையில் இருக்கும் போதும் பசியுள்ளவராக இருந்தும் தன்னிடத்திலுள்ள உணவை உண்ணக் கூடாது. தாகமுள்ளவராக இருந்தும் எதையும் குடிக்கக் கூடாது. இச்சை இருந்தும் அதை நிறைவேற்றக் கூடாது.
  • எல்லா வணக்கங்களும் அல்லாவுக்கே உரியன. அவனே எல்லா வணக்கங்களுக்கும் கூலி கொடுக்கின்றான். ரமலான் நோன்பு உண்மையான இறையச்சத்தோடும் மனத்தூய்மையுடனும் இருப்பதால் அது தனித்துவப்படுத்தப்பட்டுள்ளது. பசியோடும், தாகத்தோடும் இருப்பது மட்டும் நோன்பாகாது. இவைகளைக் கட்டுப்படுத்துவது போல் மற்ற எல்லா பாவங்களையும் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த நோன்பை ஒரு சடங்காகச் செய்பவர்களுக்கு எந்தவித பலனும் இல்லை. ஒருவர் கெட்ட பேச்சுக்களையும், கெட்ட செயல்களையும் விட்டுவிடாமல் உணவை விடுவதிலும், குடியை விடுவதிலும் மட்டும் ஆர்வம் கொள்வதால் பயனை அடைய முடியாது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

வெள்ளி, 3 ஆகஸ்ட், 2012

ரமலான் மாதச் சிறப்பு - ரமளான்



  • ரமலான் மாதம் அருள் நிறைந்த மாதம், நன்மைகளை அதிகம் செய்யும் மாதம், பிழைப்பொறுப்புத் தேடும் மாதம், அல்லாஹ்வை அதிகம் நெருங்கும் வாய்ப்பைப் பெறும் மாதம், சுவர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்பட்டு நரகத்தின் வாசல்கள் மூடப்படும் மாதம், சாத்தான்கள் விலங்கிடப்படும் மாதம், ஆயிரம் மாதங்களை விட சிறப்புமிக்க ஒரு இரவைக் கொண்ட மாதம், நரகவாதிகள் நரகத்திலிருந்து விடுதலை பெறும் மாதம், குர்ஆனை இப்பூவுலகத்தில் இறக்குவதற்கு அல்லாஹ் தேர்ந்தெடுத்த மாதம், துஆக்கள் அங்கீகரிக்கப்படும் மாதம் என்று இந்த மாதத்திற்கு பல சிறப்புக்கள் இருப்பதாக இஸ்லாமிய மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.
  • இம்மாதத்திலும் நன்மைகள் செய்யாதவர் எல்லா நன்மைகளையும் இழந்தவர் என்றும் இந்த மாதத்தில் அல்லாவிடம் பாவமன்னிப்புக் கேட்காதவர் அல்லாவின் அருளை விட்டுத் தொலைவில் இருப்பார்கள் என்றும் நபி(ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்.

புதன், 1 ஆகஸ்ட், 2012

நோன்பாளிக்கு உயரிய இடம் - ரமளான் நோன்பு



நோன்பாளிக்கு சிறந்த பரிசாக சொர்க்கத்தில் ஓர் உயரிய இடம் உள்ளது.அது தான் ரய்யான் எனும் சிறப்பு வாசல் வழியாகச் செல்லும் மிகப்பெரும் பேறு வழங்கப்படுகிறது.
அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்கள் கூறினார்கள் :-  “சொர்க்கத்தில் ரய்யான் என்று கூறப்படும் ஒரு வாசல் இருக்கிறது மறுமைநாளில் அதன் வழியாக நோன்பாளிகள் நுழைவார்கள். அவர்களைத்தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழையமாட்டார்கள்.
நோன்பாளிகள் எங்கே என்று கேட்கப்படும் . உடனே அவர்கள் எழு(ந்து வரு)வார்கள். அவர்களைத்தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள் அவர்கள் நுழைந்ததும் அவ்வாசல் அடைக்கப்பட்டுவிடும் அதன் வழியாக வேறு எவரும் நுழையமாட்டார்கள்
(அறிவிப்பவர் :சஹ்ல் ரலி நூல் :புஹாரி 1896 )
Blogger Widgets

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

Jumma mosque, Vadamadurai