அஸ்ஸலாமு அலைக்கும் வர்ஹ - “எனக்கு அல்லாஹ்வே போதுமானவன். (வழிபடுவதற்குரிய) நாயன் அவனையன்றி (வேறுயாரும்) இல்லை; அவன் மீதே நான் பரிபூரண நம்பிக்கை கொண்டுள்ளேன் - அவன் தான் மகத்தான அரியாசனத்தின் (அர்ஷின்) அதிபதி” 9:129

வியாழன், 28 ஆகஸ்ட், 2014

ஷவ்வால் ஆறு நோன்பு சில விளக்கங்கள் - நோன்பு

ரமளான் மாதத்தின் நோன்பை நோற்ற ஒருவர்,பின்னர் அதைத் தொடர்ந்து ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்பு நோற்றால் அவர் அவ்வருடம் முழுவதும் நோன்பு நோற்றவர்; போன்றவர் ஆவார். (ஆறிவிப்பவர் அபூ அய்யூபுல் அன்சாரி (ரலி) ஆதாரம்: முஸ்லிம்.)
இந்த ஹதீஸின் அடிப்படையில் ஷவ்வாலில் ஆறு நோன்பு வைப்பது பற்றி பல கேள்விகள் எழுந்துள்ளன. அவற்றை இங்கே விரிவாகக் காண்போம்.

1. கே: இந் நோன்பு வைப்பது பர்ளா? சுன்னத்தா, முஸ்தஹப்பா ?
ப : இது முஸ்தஹப் -விருப்பத்தக்கது ஆகும். சிலர் இதை சுன்னத் என்றும் கூறுகின்றனர்.

2. கே: ரமளான் முடிந்ததும் உடனே தொடர்ந்து நோற்பதா ? அல்லது சிலநாட்கள் சென்று நோற்பதா?
ப. உடனேயே தொடர்ந்து வைப்பது சிறப்பாகும். என்பதே பெரும்பாலான அறிஞர்களின் கருத்தாகும்.
ஆயினும் நபி (ஸல்) அவர்கள் ஷவ்வால் மாதத்தில் நோற்க வேண்டுமெனக்கூறினார்களே தவிர ஷவ்வால் மாதத்தில் இந்த நாட்களில் தான் வைக்கவேண்டுமெனக் கூறாததால் ஷவ்வால் மாதத்தின் எந்த நாட்களிலும் தொடர்ந்தோ,விட்டுவிட்டோ வைக்கலாம்.

3. கே: மாதவிடாயின் போது பெண்களோ, அல்லது நோயாளிகளோ ரமளானில் நோன்பு நோற்க இயலாது போனால் அதை ஷவ்வாலில் களாவாக நோற்கும் போது எந்த நோன்பை முதலில் வைப்பது ?
ப: முதலில் ரமளான் மாதத்தின் கடமையான பர்ளான நோன்பைத்தான் நோற்க வேண்டும்.

4. கே: காலதாமதமாகி ஷவ்வால் நோன்பு தவறிவிடும் என அஞ்சினால் அப்போது ஷவ்வால் நோன்பை முந்தி நோற்கலாமா?
ப : இல்லை. பர்ளான நோன்புக்குத்தான் முதலிடம் வழங்கவேண்டும்.

5. கே: ரமளான் நோன்பையும் ஷவ்வால் நோன்பையும் சேர்த்து நிய்யத் வைத்தால் இரண்டுக்குமுரிய நன்மைகளும் சேர்ந்து கிடைக்கும் என சிலர் கூறுகிறார்களே?
ப: பர்ளையும் சுன்னத்தான வணக்கங்களையும் இணைத்து வைக்க முடியாது. எவ்வாறு பர்ளான தொழுகையையும் சுன்னத்தான தொழுகையையும் சேர்த்து ஒரே தொழுகையாக தொழ முடியாதோ அதைப் போல்தான் பர்ளுடன் சேர்த்து எந்த உபரியான வணக்கங்களையும் செய்ய முடியாது.பர்ளு வேறு! உபரியான
வணக்கம் வேறு.

6. கே: ஷவ்வால் முடிந்ததும் அதற்காக ஒரு பெருநாள் கொண்டாடுகிறார்களே! இதற்கு மார்க்கத்தில் அனுமதியிருக்கிறதா?
ப: இல்லை, ‘நோன்புப்பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய இரு நாட்களைத் தான் கொண்டாடுவதற்கு நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டுள்ளார்கள்.(ஆதாரம் :அபூதாவூது,நஸயீ. ஆறிவிப்பவர் அனஸ்(ரலி).
ஆகவே, இந்த இரு நாட்களைத் தவிர வேறு எந்த நர்களையும் கொண்டாடஅனுமதியில்லை.
‘நமது மார்க்கத்தில் இல்லாத ஒன்றை புதிதாகச் செய்பவரது வணக்கம் நிராகரிக்கப்படும்’ என்ற நபிகளாரின் எச்சரிக்கை கவனத்திற் கொள்ள வேண்டியதாகும். ( அறிவிப்பவர்: ஆயிஷh(ரலி) ஆதாரம் புகாரி)

7. கே: ஷவ்வால் மாதத்தில் திருமணம், வீடுகுடியேறுவது போன்ற மங்களகரமான செயல்களைச் செய்யக் கூடாது எனத்தடுக்கிறார்களே!?
ப. அன்னை ஆயிஷா (ரலி) அவர்களின் திருமணம் நடந்தேறியதும், அவர்கள் நபிகளுடன் இல்லற வாழ்வைத் தொடங்கியதும் இந்த ஷவ்வாலில் தான் என்று அவர்களே கூறுகிறார்கள்.
ஆகவே.எந்த செயலையும் இந்த ஷவ்வாலில் நிறைவேற்றலாம். இதற்கு மார்க்கத்தில் எந்த தடையும் இல்லை.

நன்றி: அல்பாக்கவி 
Blogger Widgets

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

Jumma mosque, Vadamadurai