அஸ்ஸலாமு அலைக்கும் வர்ஹ - “எனக்கு அல்லாஹ்வே போதுமானவன். (வழிபடுவதற்குரிய) நாயன் அவனையன்றி (வேறுயாரும்) இல்லை; அவன் மீதே நான் பரிபூரண நம்பிக்கை கொண்டுள்ளேன் - அவன் தான் மகத்தான அரியாசனத்தின் (அர்ஷின்) அதிபதி” 9:129

வியாழன், 13 ஜூன், 2013

மு முதல் நு வரை - அருஞ் சொற்களஞ்சியம்

மு முதல் நு வரை

مسلم - முஸ்லிம்
அல்லாஹ்விற்கும் அவனது மார்க்கத்திற்கு மட்டும் கட்டுப்பட்டவர்.

مصحف - முஸ்ஹஃப்
ஏடு. குர்ஆனுக்கு வழங்கப்படும் மற்றொரு பெயர்.

مؤمن - முஃமின்
அல்லாஹ்வையும் அவன் கூறிய அனைத்தையும் முழுமையாக நம்பிக்கை கொண்டவர்.

مفسر - முஃபஸ்ஸிர்
குர்ஆனையும்,ஹதீஸையும் கற்றுத்தேறி குர்னுக்கு விரிவுரை செய்வோர்.

مهاجر - முஹாஜிர்
இஸ்லாத்திற்காக நாடுதுறந்து செல்பவர். மக்காவிலிருந்து மதீனாவில் குடியேறிய அகதிகளுக்கு முஹாஜிர் எனப்படும்.

مشرك - முஷ்ரிக்
அல்லாஹ்விற்கு இணை வைப்பவர்.

منافق - முனாஃபிக்
உள்ளத்தில் இறைநிராகரிப்பை வைத்துக்கொண்டு இறை நம்பிக்கையை வெளிப்படுத்துபவர்.(இரட்டை வேடம் போடுபவர்)

مد - முத்
மதீனாவில் வழக்கத்தில் இருந்து வந்த சுமார் 796 கிராம் 68 மில்லி கிராம் எடை கொண்ட ஓர் அளவு.

رضي الله عنه - ரலி
‘ரலியல்லாஹு அன்ஹு’ (அல்லாஹ் அவர்களைப் பொருந்திக் கொள்வானாக!.)

حمة الله عليه - ரஹ்
‘ரஹ்மத்துல்லாஹி அலைஹி’ (அல்லாஹ்வின் அருள் அவர்கள்மீது உண்டாகட்டும்!)

رمل - ரமல்
கஅபாவை தவாஃப் செய்யும்போது முதல் மூன்று சுற்றில் ராணுவ அணிவகுப்பைப் போன்று 
செல்வது.

رمضان - ரமளான்
இஸ்லாமிய உலகம் வற்றாத உவகையுடன் வரவேற்றுச் சிறப்பிக்கும் அரிய திங்கள் புனித ரமளான் மாதம் ஆகும். ‘ரமளான்’ என்ற அரபுச்சொல்லுக்கு பல பொருள்கள் உள்ளன. ‘சுட்டெரித்தல’ என்பது அதன் சிறப்பான பொருளாகும். ரமளான் நோன்பு மனிதனின் தீய பழக்கவழக்கங்களை சுட்டெரித்து அவனைப் புனிதனாக்குகிறது. அவன் புடம்போட்ட பொன்னாக மாறுகிறான்.தீய பழக்கவழக்கங்களையும் பாவங்களையும் சுட்டெரிப்பதால் இம்மாதத்திற்கு இப்பெயர் ஏறபட்டது. குர்ஆனில் ரமளான் என்ற சொல் ஒரே ஒரு தடவை தான் வருகிறது. (2:157)

رسول - ரசூல்
இறை தூதர். குர்ஆனில் ரஸூல் என்ற சொல் 215 தடவைகள் கூறப்பட்டுள்ளன.இதன் பன்மையான “றுஸுல்” என்ற சொல் குர்ஆனில் 238 தடவைகள் கூப்பட்டுள்ளன.

رجم - ரஜ்ம்
திருமணம் செய்த ஆண் அல்லது பெண் விபசாரம் செய்துவிட்டால் அவர்களை கல் எறிந்து கொல்வது.

نبي - நபி
அல்லாஹ்வால் தேர்ந்தெடுக்கப்பட்ட தூதர்.இதன் பன்மை “அன்பியா” வாகும். “அன்பியா” என்ற சொல் 5 தடவைகள் கூறப்பட் டுள்ளன. நபி,நபிய்யுன், நபிய்யீன் என்ற சொற்கள் குர்ஆனில் 76 தடவைகள்் வந்துள்ளன.

نية - நிய்யத்
ஒரு செயலைச் செய்வதற்கு மனதால் நினைத்தல்.

نبوة - நுபுவ்வத்
‘நபித்துவம்’ இறைத்தூதராக இறைவனால் நியமிக்கப்படுத்தல். இச்சொல் குர்ஆனில் 5 தடவைகள் கூறப்பட்டுள்ளன. (3:79,6:89,29:27, 45:16,57:26)
Blogger Widgets

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

Jumma mosque, Vadamadurai