அஸ்ஸலாமு அலைக்கும் வர்ஹ - “எனக்கு அல்லாஹ்வே போதுமானவன். (வழிபடுவதற்குரிய) நாயன் அவனையன்றி (வேறுயாரும்) இல்லை; அவன் மீதே நான் பரிபூரண நம்பிக்கை கொண்டுள்ளேன் - அவன் தான் மகத்தான அரியாசனத்தின் (அர்ஷின்) அதிபதி” 9:129

புதன், 18 ஜனவரி, 2012

முகம்மது நபி - இசுலாம்

இவர் கி.பி. 571ல் மக்கா நகரில் பிறந்தார். இவரது 40 வது வயதில் இறை தூதுகள் கிடைத்தன. அதன் பின்னர் அவர்கள் வாழ்ந்த மிகக் குறுகிய காலமாகிய 23 ஆண்டுகளிலேயே மனித வாழ்வில் வியத்தகு மாற்றங்களை நிகழ்த்திகாட்டினார்கள். இவரைப்பற்றி பிரிட்டானிகா கலைகளஞ்சியம் 'மதத்தலைவர்களில் தலை சிறந்த வெற்றியாளர்' என்று கூறுகிறது.
உலக சரித்திரத்தில் இவருடைய வரலாறே நுணுக்கமான பகுத்தாய்வுகளுடன் மிக அதிகமான நம்பகத்தன்மை வாய்ந்த ஆதாரங்களுடன் தொகுக்கப்பட்டதாகவும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இந்த வரலாறே ஹதீஸ் என்பதாக அழைக்கப்படுகிறது.

சிறப்புகள்

இவரது சிறப்பம்சமாக இவரை கடுமையாக எதிர்த்தவர்கள் கூட இவரது புதிய கருத்துக்காக இவரை கொல்லவும் படைஎடுத்தார்களே தவிர இவரை பொய்யர் என்று நிரூபிக்க முனையவில்லை என்பதை குறிப்பிடலாம்.
இஸ்லாமிய வரலாற்றை ஆராயும், போது இவரை உக்கிரமாக எதிர்த்த அபூஜஹில் கூட
முஹம்மதே நீர் ஒரு பொய்யர் என்று நான் கூறவில்லை; நீர் பிரச்சாரம் செய்யும் இச்செய்தி உண்மையானதல்ல என்றே நான் கருதுகிறேன்
என்று கூறியதாகவும் அறிய முடிகிறது.
மற்றொரு கடும் எதிர்ப்பைக்காட்டிய குறைஷித் தலைவன் அபுஸுப்யான் ஒரு முறை இஸ்லாத்தை பின்பற்றுவோருக்கு எதிரான தூதுக்குழுவுக்கு தலைமை தாங்கி உரோமப் பேரரசன் ஹிராக்ளியசின் (Heraclius) அவைக்கு சென்ற போது
முகம்மத் எப்போதும் பொய் பேசியதில்லை, தாம் கொடுத்த வாக்கை நிறைவேற்றிட ஒரு போதும் தவறியதுமில்லை
என்று கூறியதாகவும், இதனைக்கேட்ட ஹிராக்ளியஸ்
மனிதர்களுக்கிடையிலான விவகாரங்களிலேயே பொய் பேசியதில்லை என அனுபவபூர்வமாக தெரிந்து விட்ட பிறகு இவ்வளவு பொய்யை புனைந்திருப்பார் என்று எப்படிச் சொல்ல முடியும்?
என்று அவரை கேட்டதாகவும் வரலாற்றில் பதிவாகியுள்ளது.
இன்னும் முஸ்லிம்களின் திருக்குர்ஆன் இவரை 'முஸ்லிம்களுக்காக மட்டுமல்ல உலக மனிதர்கள் அனைவருக்குமாக அனுப்பப்பட்டவர்' என்பதை இப்படி கூறுகிறது.
(நபியே! ) உம்மை (உலக) மக்கள் அனைவருக்கும் இறைத் தூதராகவே நாம் அனுப்பியுள்ளோம். அவர்களுக்கு நற்செய்தி கூறக்கூடியவராவும் (பாவங்கள் குறித்து ) அச்சுறுத்தி எச்சரிக்கை செய்பவராகவும் (,அனுப்பியுள்ளோம்.) (34:28)

இறைத்தூது கிடைத்த ஆரம்ப காலங்கள்.

தனது 40 வது வயதிலேயே இறை அழைப்பு பணி தமக்கு கிடைக்கப்பெற்றதும் முஹம்மத் (ஸல்) அவர்கள் தமது சமூகத்தினரை 'ஸபா' மலைக்குன்றின் அருகே முதல் முறையாக ஒன்று திரட்டினார்கள். ஸபா மலை மீது ஏறி நின்ற அவர் தனக்கு முன்னால் நிற்கும் மக்களைப் பார்த்துக் கேட்கிறார்:
இந்த மலையின் பின்னால் உங்களைத் தாக்க ஒரு படை
நிற்கிறது என்று நான் சொன்னால் நீங்கள் நம்புவீர்களா?
மக்கள்: ‘ஆம், நம்புவோம்’
முஹம்மத்: ‘ஏன் நம்புவீர்கள்’
மக்கள்: ‘ஏனெனில் நீர் பொய் சொன்னதில்லை’
முஹம்மத்: ‘அவ்வாறாயின் இவ்வுலகுக்குப் பின்னால் வரும் இன்னொரு வாழ்வு பற்றியும் அங்கு காத்திருக்கும் தண்டனைப் பற்றியும் நான் உங்களுக்கு எச்சரிக்கிறேன்.’
(ஆதாரநூல்: ரஹீகுல் மக்தூம்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Blogger Widgets

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

Jumma mosque, Vadamadurai