இறைவனுக்கு அடிபணிவதையும், இறைவன் ஒருவனுக்கே எல்லாப் புகழும் உரியன என்பதிலும் இசுலாமியர் அழுத்தமான நம்பிக்கை கொண்டிருந்தனர். நபிகள் பெருமான் இசுலாம் மதத்தின் அடிப்படைச் செய்திகளைக் கூறியுள்ளார். இறைவன், வானவர், வேதம், தூதர், இறுதித் தீர்ப்பு, ஆகிய ஐந்தின் மீது நம்பிக்கைக் கொள்ளுதல், நன்மை தீமைகளை எந்நிலையிலும் ஏற்றுக் கொள்ளுதல் ஆகிய ஆறும் இசுலாம் மதத்தின் அடிப்படைச் செய்திகளாகும்.
|
இசுலாம் மதத்திற்கு ஐந்து அடிப்படைக் கடமைகள் உள்ளன.
- இறைவனை ஏற்று முகமதை தூதராகக் கொள்ளுதல் (கலிமா)
- தொழுகை
- நோன்பு
- தான் ஈட்டும் வருவாயில் 2 1/2 விழுக்காடு ஏழை எளியவர்களுக்கு வழங்குதல்.
- புண்ணியப் பயணம் மேற்கொள்ளுதல்
ஆகிய ஐந்தும் மேற்கூறிய கடமைகளாகும். மேற்கூறிய ஆறு அடிப்படைச் செய்திகளும், ஐந்து அடிப்படைக் கடமைகளும் இசுலாம் மதத்தில் இன்றியமையாதன. இசுலாம் மதத்தைத் தழுவிய தமிழர், இந்நெறிகளைத் தவறாது கைக்கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக