அஸ்ஸலாமு அலைக்கும் வர்ஹ - “எனக்கு அல்லாஹ்வே போதுமானவன். (வழிபடுவதற்குரிய) நாயன் அவனையன்றி (வேறுயாரும்) இல்லை; அவன் மீதே நான் பரிபூரண நம்பிக்கை கொண்டுள்ளேன் - அவன் தான் மகத்தான அரியாசனத்தின் (அர்ஷின்) அதிபதி” 9:129

திங்கள், 16 ஜனவரி, 2012

இசுலாம்

அல்லாஹ்
அஸ்ஸலாமு அலைக்கும் ( வர்ஹ )

சுலாம் அல்லது இஸ்லாம் அரபு: الإسلام; al-'islām,Islam) என்பது ஏழாம் நூற்றாண்டில் சவுதி அரேபியாவில் தோன்றிசமயமாகும். இது கிறித்தவம், யூதம் போன்று ஓர் ஆபிரகாமிய சமயம் ஆகும். இச் சமயம் முகம்மது நபி என்பவரால் பரப்பப்பட்டது. இசுலாமின் மூலமான திருக்குர்ஆன் இவரை முதல் மனிதர் ஆதாம் முதல் அனுப்பப்பட்டு வந்த இறை தூதர்களில் இறுதியானவராக அடையாளப்படுத்துகிறது. உலகம் முழுவதும் 180 கோடி மக்கள் இச் சமயத்தைப் பின்பற்றுகிறார்கள் .இசுலாம் உலகில் பெரிய சமயமாகும்.

சொல்-வேர்

இஸ்லாம் , மூன்று வேர் கொண்ட ஸ்-ல்-ம் கொண்ட ஒரு வினை பெயர் சொல் . அது அராபிய வினைச் சொல் `அஸ்லாமா` விலிருந்து திரிபு ஆகிறது. அஸ்லாமா ஏற்றுக்கொள்ளுதல், சரணடைதல், கீழ்படிதல் முதலிய பொருள்களில் வரும். அதனால் இஸ்லாம் கடவுளை ஏற்றுக் கொண்டு சரணடைதல் ஆகும்,; நம்பிக்கையாளர்கள் கடவுளை வணங்கி நம்பிக்கையை காட்டி, அவர் கட்டளைகளை நிறைவேற்றி, பலதெய்வ வணக்கத்தை ஒதுக்க வேண்டும். இஸ்லாம் என்ற சொல் குர்ஆனில் பல பொருள்களை கொடுக்கப்பட்டுள்ளது. சில செய்யுள்களில் (ஆயாத்துகள்), இஸ்லாம் உள் மனத்தின் திட நம்பிக்கையாக அழுத்தம் கொடுக்கப் பட்டுள்ளது. ”கடவுள் யாருக்கு நேர்வழி காட்ட நாடுகிறானோ அவர்களுடைய மனதை விசாலமாக்குகிறான்.. மற்ற செய்யுள்கள் இஸ்லாத்தையும் மார்கத்தையும் ஒன்றாக்குகிரன,. “இன்று நான் உங்கள் மார்கத்தை முழுமையாக்கிவிட்டேன்; உங்கள் மீது என் ஆசியை பூர்த்தியாக்கி விட்டேன், இன்னும் உங்களுக்காக நான் இஸ்லாத்தை மார்க்கமாக ஆக்கினேன்”. சொல்லளவில் மார்கத்தை வற்புறுத்துவதற்கு மேலே போய், இன்னும் சில செய்யுள்கள் இஸ்லாத்தை கடவுள் பக்கம் திரும்புவதற்கு ஈடாக்குகின்றன. இஸ்லாமிய சிந்தனையில், இஸ்லாம்ஈமான் (நம்பிக்கை),இஹ்சான்(செம்மை) உடன் மூன்றாவதாக சொல்லப் படுகிறது அது இஸ்லாம் கடவுள் வணக்க செயல்கள் (இபாதாஹ்) மற்றும் இஸ்லாமிய நீதி (ஷரியா) இவற்றை காண்பிக்கிறத.

இசுலாமிய நம்பிக்கை

இசுலாமின் நம்பிக்கையின்படி இந்த பிரபஞ்சத்திலுள்ளவைகள் அனைத்தும் இறைவனால் படைக்கப்பட்டதாகும். மேலும் அடிப்படையில் நம்பிக்கைக் கொள்ள வேண்டிய விடயங்கள் ஆறாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. அவைகளாவன;

இறைவன் ஒருவனே அவனது தூதர் முஹம்மத் (சல்)

அரபு மொழியில் "லாஇலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரசூலுல்லாஹ்" என கூறப்படும் "வணக்கத்துக்குரிய நாயன் ஏக ஒருவனைத் தவிர வேறு இல்லை; முஹம்மது (சல்) அவர்கள் இறைவனின் திருத்தூதர் ஆகும்" என்பதை உளப்பூர்வமாக ஏற்றுக்கொள்வதே இஸ்லாமியர் என்பதற்கான அடிப்படை தகுதியாகும்..இதை உறுதிபட ஏற்றுக்கொண்டவன் திருக்குர்ஆனிலுள்ள ஏனைய மறைவான விடயங்களை ஏற்றுக்கொள்வது கடமையாகிறது.

மலக்குகள்.

மனிதனது புலனுறுப்புகளால் புரிந்து கொள்ள முடியாத, இறைவனது கட்டளைகளை செயல்படுத்துவதற்காக மட்டும் ஒளியைக் கொண்டு படைக்கப்பட்ட சக்திகளை (திருகுர்ஆன் பிரயோகம்மலக்குகள்) நம்புவது.

முன்னைய வேதங்கள்.

முகம்மது (சல்) அவர்களுக்கு முன்னர் வாழ்ந்த இறைதூதர்களுக்கு வேதங்கள் கொடுக்கப்பட்டது உண்மையே என நம்புதல்.

முன்னைய இறைதூதர்கள்.

முன்னர் வாழ்ந்த இறைத்துதர்களை நம்புவது. திருக்குர் ஆன் பின்வருமாறு கூறுகிறது: அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும் நம்முடைய தூதர் வராத எந்தச் சமுதாயத்தினரும் பூமியில் இருக்கவில்லை(திருக்குர்ஆன்: அல்-பாதிர்: 24)இவ்வாறு கூறப்பட்டவர்களில் 25 தூதர்களுடைய பெயர்கள் திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ளன.

இறப்பின் பின் வாழ்க்கை.

இறப்பிற்கு பின்னுள்ள வாழ்க்கையை நம்புவது. திருக்குர் ஆன் பின்வருமாறு கூறுகிறது: இறந்தவர்களை அல்லாஹ் (உயிர்ப்பித்து) எழுப்ப மாட்டான் என்று அவர்கள் அல்லாஹ்வின் மீது பிரமாணமாகச் சத்தியம் செய்கிறார்கள். அப்படியல்ல! (உயிர் கொடுத்து எழுப்புவதான அல்லாஹ்வின்) வாக்கு மிக்க உறுதியானதாகும். எனினும் மக்களில் பெரும்பாலோர் இதை அறிந்து கொள்வதில்லை (திருக்குர்ஆன் 16:38.).

விதி.

"கலாகத்ர்" என திருக்குர் ஆனில் கையாளப்பட்டுள்ள இச்சொல் தமிழில் "விதி" என மொழி பெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. பிரபஞ்சத்திலுள்ள அனைத்தும் இறைவன் வகுத்த விதியின் அடிப்படையிலேயே செயல்படுகின்றன என இதற்கு விளக்கம் தரலாம். இவ்விதி குறித்து திருக்குர்ஆன் கூறும் போது "உனக்குக் கிடைக்கும் எந்த நன்மையும் அல்லாஹ்விடமிருந்தே கிடைக்கிறது (இது இறைவன் ஏற்படுத்தியுள்ள நியதி). இன்னும், உனக்கு ஏதாவது ஒரு தீங்கு ஏற்பட்டால் அது உன்னால் தான் வந்தது. (நபியே!) நாம் உம்மை மனிதர்களுக்கு (இவற்றை எடுத்துக் கூறுவதற்காகத்) தூதராகவே அனுப்பியுள்ளோம் - அல்லாஹ்வே போதுமான சாட்சியாக இருக்கின்றான்.(4:79)" என கூறுகிறது. இதன் விளக்கமானது காரணங்களிலாமல் காரியங்களில்லை என்பதாகும் ஆகும். உதாரணம்: ஒருவன் வீதியை கடக்க எத்தனிக்கிறான்; அந்நேரம் குறுக்கே ஒரு வாகனம் வருகிறது. அவன் சிந்தித்து நிதானித்து கடப்பானானால் அவனுக்கு காயம் ஏற்படாது என்பதே விதி. மாறாக, அவனது அறிவு குறைபாட்டினால் வாகனத்தின் முன் செல்வானானால் அவனுக்கு காயம் ஏற்படும் என்பதே விதி.


நன்றி: விக்கிப்பீடியா


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Blogger Widgets

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

Jumma mosque, Vadamadurai