அஸ்ஸலாமு அலைக்கும் வர்ஹ - “எனக்கு அல்லாஹ்வே போதுமானவன். (வழிபடுவதற்குரிய) நாயன் அவனையன்றி (வேறுயாரும்) இல்லை; அவன் மீதே நான் பரிபூரண நம்பிக்கை கொண்டுள்ளேன் - அவன் தான் மகத்தான அரியாசனத்தின் (அர்ஷின்) அதிபதி” 9:129

திங்கள், 23 ஏப்ரல், 2018

நபிமார்கள் என்றால் யார்? - நபிமார்கள்

மனித குலத்தை படைத்த அல்லாஹ், அம்மனிதர்களுக்கு நேர்வழி காட்ட காலத்திற்கு காலம் இறைத்தூதர்களை அனுப்பி வைத்தான். அவர்கள் எல்லா நாடுகளுக்கும் எல்லா மனித இனத்திற்கும் அனுப்பப்பட்டனர். அவர்கள் அல்லாஹ்வின் தூதை மக்களுக்கு எத்தி வைத்தனர். அதாவது, அல்லாஹ் ஒருவன் என்றும் அவனை சிலை வடிவிலோ வேறு வடிவிலோ வணங்க கூடாது என்றும் அல்லாஹ் அனுப்பியுள்ள நபிமார்களை இறைத்தூதராக ஏற்கவேண்டும் என்றும் அவர்கள் கூறும் உபதேசங்களையும் சட்டங்களையும் பின்பற்றல் வேண்டும் என்றும் அவர்கள் மக்களுக்கு போதித்தனர்.

ஒவ்வொரு இறைத்தூதரும் அவரவர்களின் சமுதாயத்திற்கு இறைத்தூதராக அனுப்பப்பட்டனர். ஆனால் இறுதி இறைத்தூதரான பெருமானார் முஹம்மத் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் மட்டும் முழு உலகிற்கும் இறைத்தூதராக அனுப்பப்பட்டார்கள். பெருமானாருக்கு அருளப்பட்ட புனித அல் குர்ஆன் வேதம் முழு உலகிற்குமே ஒரு அருளாகவும் வழிகாட்டியாகவும் அருளப்பட்டது.

இவ்வுலகிற்கு மொத்தம் ஒரு இலட்சத்து இருபத்து நாலாயிரம் (124,000) நபிமார்கள் அனுப்பப்பட்டனர். அவர்களில் இருபத்தைந்து (25) பேருடைய பெயர்கள் மட்டுமே அல் குர்ஆனிலே கூறப்பட்டுள்ளது. இவ்வுலகின் முதல் மனிதர் ஆதம் (அலைஹிஸ்ஸலாம்) அன்னவர்கள் இவ்வுலகிற்கு அனுப்பப்பட்ட முதல் நபி என்பதும் பெருமானார் முஹம்மத் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் இறுதி இறைத்தூதர் என்பதும் முஸ்லிம்களின் ஆழிய நம்பிக்கையாகும். பெருமானார் முஹம்மத் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களுக்கு பின் எந்த ஒரு நபியும் வரமாட்டார்கள். அப்படி யாரேனும் நபி என்று உரிமை கோரினால் அவன் பொய்யன் என்பதும் அவனை பின்பற்றுவோர் காபிர்கள் மற்றும் வழிகேடர்கள் என்பதும் முஸ்லிம்களின் அடிப்படை கோட்பாடாகும்.

பெருமானார் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களுக்கு பின்னர் தம்மை நபி என்று உரிமை கோரி பல பொய்யர்கள் உருவெடுத்து வந்தனர். காலப்போக்கில் அவர்கள் இல்லாமல் போயினர்.

அவர்களில் முஸைலமா, குலாம் அஹ்மத் காதியானி போன்றோர் குறிப்பிடத்தக்கோர். இன்றும் இந்த குலாம் அஹ்மத் காதியானியை பின்பற்றுவோர் காதியானிகள் என்றும் அஹ்மதியாக்கள் என்றும் அழைக்கப்படுகின்றனர். இவர்கள் இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் வசித்து வருகின்றனர். உடை தோற்றத்தில் முஸ்லிம்களை போலவே காட்சி தரும் இவர்கள், உண்மையில் முஸ்லிம்கள் அல்லர் என்பதையும் தெளிவாக விளங்கி கொள்ள வேண்டும். இவர்களோடு முஸ்லிம்கள் எவ்வித திருமண உறவுகளோ சமய உறவுகளோ வைத்து கொள்வதில்லை. அவர்கள் மரணித்தாலும் முஸ்லிம்களின் மையவாடியில் அடக்கம் செய்ய அனுமதிக்கப்படுவதில்லை.


அல் குர்ஆனிலே கூறப்பட்டுள்ள நபிமார்களின் பெயர்கள்:

1. ஆதம் (அலைஹிஸ்ஸலாம்)
2. இத்ரீஸ் (அலைஹிஸ்ஸலாம்)
3. நூஹ் (அலைஹிஸ்ஸலாம்)
4. ஹூத் (அலைஹிஸ்ஸலாம்)
5. ஸாலிஹ் (அலைஹிஸ்ஸலாம்)
6. இப்ராஹிம் (அலைஹிஸ்ஸலாம்)
7. லூத் (அலைஹிஸ்ஸலாம்)
8. இஸ்மாயில் (அலைஹிஸ்ஸலாம்)
9. இஸ்ஹாக் (அலைஹிஸ்ஸலாம்)
10. யாகூப் (அலைஹிஸ்ஸலாம்)
11. யூஸுப் (அலைஹிஸ்ஸலாம்)
12. அய்யூப் (அலைஹிஸ்ஸலாம்)
13. ஷுஹைப் (அலைஹிஸ்ஸலாம்)
14. மூஸா (அலைஹிஸ்ஸலாம்)
15. ஹாரூன் (அலைஹிஸ்ஸலாம்)
16. தாவூத் (அலைஹிஸ்ஸலாம்)
17. ஸுலைமான் (அலைஹிஸ்ஸலாம்)
18. இல்யாஸ் (அலைஹிஸ்ஸலாம்)
19. அல் யஸஃ (அலைஹிஸ்ஸலாம்)
20. யூனுஸ் (அலைஹிஸ்ஸலாம்)
21. துல்கிப்ல் (அலைஹிஸ்ஸலாம்)
22. ஸகரிய்யாஹ் (அலைஹிஸ்ஸலாம்)
23. யஹ்யா (அலைஹிஸ்ஸலாம்)
24. ஈஸா (அலைஹிஸ்ஸலாம்)
25. முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் )

குறிப்பு :
எப்போதும் முஹம்மத் நபிகள் நாயகத்தின் பெயரை எழுதும்போது அல்லது கூறும்போது ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் (அன்னாரின் மீது சாந்தியும் அல்லாஹ்வின் அருளும் உண்டாவதாக) என்பதை சேர்க்க வேண்டும். ஏனைய நபிமார்கள் அல்லது வானவர்களின் (மலக்குகள்) பெயரோடு அலைஹிஸ்ஸலாம் (அன்னாரின் மீது சாந்தி உண்டாகட்டும்) என்று சேர்க்கவேண்டும்.

நன்றி: http://www.mailofislam.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Blogger Widgets

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

Jumma mosque, Vadamadurai